ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் இன்று (22) கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றதுடன், அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
அந்த கூட்டத்தில், புதிய தவிசாளர் நியமிக்கப்பட்டு, மற்ற பதவிகளுக்கு முன்பு பணியாற்றியவர்களே நியமிக்கப்பட்டனர்.
அதன்படி, புதிய தவிசாளராக சிரேஷ்ட பேராசிரியர் தாகுராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டதுடன், ஜி.எல்.பீரிஸின் கூற்றுப்படி புதிய தவிசாளரை நியமிப்பதற்கு சட்டரீதியாக வாய்ப்பில்லைதானே என ஊடகவியலாளர்கள் ராஜபக்ஷவிடம் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ராஜபக்ஷ, ஜி.எல்.பீரிஸுக்கு “பைத்தியக்காரன்” என பதிலளித்தார்.
இதேவேளை, எந்த நேரத்திலும் எந்த தேர்தலுக்கும் தாம் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.