நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் போதே சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராவது பாரதூரமானதொரு நிலை என்றும், அதற்கு கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இன்று (22) தெரிவித்தார்.
அவரது கட்சி உறுப்புரிமை குறித்து இன்று முடிவு எடுக்கப்படவுள்ளதாக பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விஜேதாச ராஜபக்ஷ மிகத் தெளிவாகத் தவறிழைத்துவிட்டதாகத் தெரிகிறதென்றும், விஜேதாச ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கட்சி உறுப்புரிமையை இழந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சிக்கல் ஏற்படலாம் என திஸ்ஸ குட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.