நன்றி தெரிவித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ள செந்தில் தொண்டமான்!

Date:

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடத்திய அறவழி போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென வலியுறுத்தி மலையகத்தில் பல மாவட்டங்களிலும், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தை வலுப்பெற செய்த தொழிலாளர்கள், வர்த்தகர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்ளவதோடு, எதிர்வரும் 24ஆம் திகதி கம்பனிகளுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்மானம் எட்டப்படவில்லை என்றால் இந்த போராட்டம் வலுப்பெறும் எனவும் செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

15 துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு

மின்சாரம், குடிநீர், சுகாதாரம், உணவு மற்றும் போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஒளிபரப்பு...

இலங்கைக்கு மீண்டும் கரம் கொடுக்கும் IMF

கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும் வெளிநாட்டு கையிருப்பு...

ரம்புக்கனை அதிவேக நெடுஞ்சாலை இரண்டாம் கட்ட பணி தொடக்கம்

ரம்புக்கனை முதல் கலகெதர வரை அமைக்கப்படவுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின்...

SJB+SLPP இணைந்ததால் NPP தோல்வி

இடைக்காலத் தடை உத்தரவினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வனாத்தவில்லு பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான...