ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் குழு கூட்டம் சட்டவிரோதமானது என முன்னாள் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். எல். பீரிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லுபடியற்றவை எனவும் அவை எவ்வகையிலும் செல்லுபடியாகாது எனவும் பீரிஸ் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் சென்று அந்த கூட்டத்தின் முடிவுகளை செல்லுபடியற்றதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.