அக்குரணை பள்ளிவாசல் மீது தாக்குதல் எச்சரிக்கை ; பொய்யான தகவல் வழங்கிய மௌலவி கைது!

Date:

அக்குரணை  மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியிலுள்ள பள்ளிவாசல் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக 118 என்ற அவசர தொலைபேசி இலகத்துக்கு இரண்டு முறை பொய்யான அழைப்புகளை விடுத்த 21 வயதான மௌலவி மே 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து சைபர் குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஹரிஸ்பத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சந்தேகநபர், தான் வழங்கிய தகவல் போலியானது என பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சந்தேக நபர் ஏப்ரல் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் இவ்வாறு இரண்டு பொய்யான அழைப்புகளை மேற்கொண்டுள்ளார். இவரின் போலியான எச்சரிக்கையை அடுத்து அக்குறணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...