ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது எனவும், இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அக்கட்சியின் உப தலைவர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் பெயர் மற்றும் நிறைவேற்று குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது