இந்தியா, இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்

0
187

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் மூலம் இலங்கை வந்தடையும் எனவும் மேலும் அவர் தெரிவித்தார் .

இதேவேளை நன்கொடையாக ஒரு வாரத்திற்குள் இந்தோனேசிய அரசாங்கத்திடமிருந்து 340 மில்லியன் மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கப்பெறும் எனவும் அவர் தெரிவித்தார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here