“இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்காக தன்னை பதவி விலகுமாறு எவரும் கூறுவது முறையற்றது “என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“நான் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக இருக்க தயாராக இருக்கிறேன். என்னை பதவி விலகச் சொல்வது முறையற்றது,” என்றார்.
தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஒரு வருட காலத்திற்கு அனைத்து கட்சிகளின் இடைக்கால அரசாங்க பிரதிநிதித்துவத்தை அமைப்பதற்காக பிரதமர் உட்பட முழு அமைச்சரவையையும் இராஜினாமா செய்யுமாறு முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரியதை அடுத்து அவர் இவ்வாறு வருத்தம் தெரிவித்துள்ளார்.