பொரளை மயானத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸின் DNA அறிக்கையை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று அரசாங்க ரசனையாளருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான அவதானிப்புகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.