அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக களமிறங்குவார் என அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
“ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக போட்டியிட்டால் நான் அவருக்கு ஆதரவளிப்பேன் ஆனால் அவர் உறுதிப்படுத்தவில்லை” என்று அமைச்சர் ரணதுங்க நேற்று பிற்பகல் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறினார்.
“தேசத்தை ஸ்திரப்படுத்தியவர் ரணில் விக்கிரமசிங்க என்பதால் நான் அவருக்கு ஆதரவளிப்பேன்” என்று அமைச்சர் மேலும் கூறினார்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு மசோதா குறித்து கேட்டதற்கு, பயங்கரவாதத்தை தடுக்க சில சட்டம் வேண்டும் என்று அமைச்சர் கூறினார். யாரும் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்கக் கூடாது” என்று அமைச்சர் தெரிவித்தார்.