”ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழினத்திற்காக செயலாற்றுவதை நாடு கடந்த அரசாங்கம் வரவேற்பதுடன் தமிழர்களின் விடுதலைக்காக ஏனைய தமிழ் தேசிய சக்திகளும் இணைவது காலத்தின் கட்டாயம்” – என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகள் இனணந்து இன்று செவ்வாய்கிழமை இரு பிரதான கோரிக்கைகளை முன் நிறுத்தி முழமையாக தமிழர் தாயகத்தை முடக்கி தமிழர்களின் முழுமையான எதிர்பையும், இனியும் தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதனை சர்வதேசத்திற்கும் , சிங்கள மக்களுக்கும் எச்சரிக்கும் முகமாக நடைபெறும் இந்த போராட்டத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முழு ஆதரவை வழங்குகிறது.
பயங்கரவாத எதிப்புச்சட்ட மூலம் என்ற சிங்களப் பேரினவாத அரசின் திட்டத்தை தோற்கடிப்பது, தமிர்களின் மரபுவழித்தாயகமான வடக்கு , கிழக்கில் எமது வரலாற்றுப் பாரம்பரியத்தையும், தொண்மையும் சிதைக்கும் நோக்குடன் தமிழர்களின் தொண்மையான வழிபாட்டுத் தலங்கள் மீது திட்டமிட்டு நடை பெறும் சிதைப்புகள், தாக்குதல்களை தடுத்து நிறுத்துதல் என்பன மிக முக்கிய கோரிக்கைகளான உள்ளன.
இந்த இரு முக்கிய கோரிக்கைகளோடு ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழினத்திற்காக செயலாற்றுவதை நாடு கடந்த அரசாங்கம் வரவேற்பதுடன் தமிழர்களின் விடுதலைக்காக ஏனைய தமிழ் தேசிய சக்திகளும் இணைவது காலத்தின் கட்டாயம் என்பத்தை வலி உறுத்தி நிற்கின்றது. மீண்டும் போராட்டம் வெற்றி பெற அணைவரையம் ஒத்துழைக்குமாறும், பங்கு பெற்றுமாறும், உரிமையுடனும்
வேண்டுகின்றோம் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
N.S