113ஐ பூர்த்தி செய்துவிட்டோம் – ராஜபக்ஷ அணியை கதிகலங்க வைத்துள்ள செய்தி

0
343

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல ‘லங்காதீப’விடம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகி தற்போது சுயாதீன எம்.பி.க்களாக உள்ள 41 பேரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஏனைய எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லக்மன் கிரியெல்ல, பிரேரணை சமர்ப்பிக்கப்படும் விதம், கையளிக்கப்பட்டதன் பின்னர் ஏற்படும் நிலைமை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து மேலும் விவாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க பல அரசியல் கட்சிகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here