சட்டவிரோதமான இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக ஷஷி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்ததுடன், வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
அந்த வழக்கு இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அன்றைய தினம் தற்காப்பு தரப்பினர் தயாராக இல்லாவிட்டாலும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் இவ்வாறு காலதாமதம் செய்தால் வழக்கை முடிக்க முடியாது எனவும் நீதவான் திறந்த நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.