மார்ச் மாதத்தில் 50.3% ஆக இருந்த மொத்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 35.3% ஆக குறைந்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலை 30.6% ஆகவும், உணவு அல்லாத பொருட்களின் விலை 37.6% ஆகவும் குறைந்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்படும் பணவீக்கம், 2022 ஏப்ரல் முதல் 2023 ஏப்ரல் வரையிலான 12 மாதங்களில் 50.3 சதவீதத்திலிருந்து 35.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மத்திய வங்கி ரூபாயை மிதக்கச் செய்ததால் பணவீக்கம் உயர்ந்தது கடுமையாக உயர்ந்ததுடன் ரூபாயின் பாதிப்பு 80 சதவீதத்தை இழந்தது.
இதேவேளை உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் காரணமாக உயர்ந்து வரும் உலகளாவிய எரிசக்தி மற்றும் பிற பொருட்களின் விலைகளும் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமாக அமைந்தன.
இதற்கிடையில், உணவு விலைகள் மார்ச் மாதத்தில் 47.6 சதவீதத்தில் இருந்தது. அது ஏப்ரல் மாதத்தில் 30.6 சதவீதமாக குறைந்துள்ளது. மாதாந்திர உணவு விலைகள் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளது.
போக்குவரத்துச் செலவுகள் மற்றும் பிற பயன்பாட்டுச் செலவுகள் குறைக்கப்பட்டதால், உணவு அல்லாத பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன.
N.S