தபால்மூல வாக்களிப்பு, வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு

0
145

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் (29) நிறைவடைவதாகவும் வாக்களிப்புக்கான காலம் இனியும் நீட்டிக்கப்படாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

எனவே, வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள சகல அரச உத்தியோகத்தர்களும் தவறாமல் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தபால் மூல  வாக்களிப்புக்கு இம்முறை 647,495 அரச உத்தியோகத்தர்கள் தகுதி பெற்றுள்ளனர். அதன்படி, தபால்மூல வாக்களிப்பு கடந்த 24, 25 ஆம் திகதிகளிலும் நேற்று (28) ஆம் திகதியும் வாக்கெடுப்பு நடைபெற்றதுடன் இறுதி நாளான இன்றும் (29) வாக்கெடுப்பு நடைபெறும்.

அத்துடன், தபால்மூல வாக்கெடுப்புக்கான காலவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றமையால் இனியும் வாக்களிப்புக்கான கால அவகாசம் வழங்கப்படமாட்டாது.

இதேவேளை, உள்ளூராட்சிமன்றத் அதிகார சபைகளுக்கான உத்தியோகபூர்வ வாக்கெடுப்பு எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதன்படி, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நேற்று முன்தினம் (27) முதல் விசேட தபால் சேவை ஊடாக விநியோகிக்கப்பட்டன. வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் (29) நிறைவடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here