இலங்கை தொடர்பில் தமிழக சட்டசபையில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்!

Date:

இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபேரவையில் முன்வைக்கப்பட்ட தனிநபர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசு இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாக தெரிவித்தார்.

அதற்கமைய, 80 கோடி ரூபா பெறுமதியான 40,000 மெட்ரிக் டன் அரிசி, 137 மருந்து பொருட்கள் (28 கோடி ரூபா) மற்றும் குழந்தைகளுக்காக 500 டன் பால்மா 15 கோடி ரூபா) என்பவற்றை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்காக தனது சொந்த நிதியிலிருந்து 50 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சியின் துணைத்தலைவர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது தீர்மானத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிதெரிவித்த முதல்வர் ஸ்டாலின் தற்போது, தாம் வழங்க முன்வந்திருப்பது முதற்கட்ட உதவி என்றும், தேவையேற்படின், அடுத்தகட்டமாக உதவுவதற்கும் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி...

அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற...

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...