ஆர்.எம். பார்க்ஸின் எரிபொருள் விநியோக சேவை மே10 ஆம் திகதி முதல் ஆரம்பம் !

0
134

அமெரிக்காவின் ஆர்.எம் பார்க்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் முதல் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இதன்படி ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனம் மே மாதம் 10 ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோக செயற்பாடுகளை நாட்டின் ஆரம்பிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனத்துக்கு சொந்தமான டீசல் மற்றும் பெட்ரோல் தாங்கிக் கப்பல்கள் ஏற்கனவே நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ள போதிலும் எரிபொருள் விநியோகத்திற்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னரே எரிபொருளை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ஆர். எம். பார்க்ஸ் நிறுவனத்திற்கு, நாட்டில் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here