நாகை மீனவர்கள் மீது திடீர் தாக்குதல்

Date:

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலில் முருகன் என்ற மீனவர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் முருகன் என்ற மீனவர் படுகாயமடைந்தார். அவரை சக மீனவர்கள் மீட்டு நாகை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மீனவர்களை கட்டையால் தாக்கி அவர்களிடம் இருந்து இந்திய ரூ.5 லட்சம் மதிப்பிலான வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை இலங்கை கடற்படையினர் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

மீனவர்கள் படகுகளை வழிமறித்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4,...

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...

ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகல் செய்தி உண்மையா?

டொலர் 2.5 மில்லியன் மதிப்பிலான பொருளாதார மோசடி குறித்த விசாரணை நடைபெற்று...

விவசாயிகள் கோரும் அளவிற்கு உரத்தை வழங்க முடியாது

இவ்வருட யாலா (Yala) பயிர் பருவத்திற்கு விவசாயிகள் கோரும் அளவிற்கு முழுமையாக...