கொட்டக்கலையில் ரணில்! தலவாக்கலையில் சஜித்!

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொட்டக்கலை மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்க உள்ளார்.

இது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்பை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விடுத்துள்ளார்.

கொட்டக்கலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மே தின கூட்டத்தில் அதிகளவான மலையக மக்கள் பங்கேற்க உள்ளதாகவும் அங்கு மே தின கூட்டம் மற்றும் பேரணி இடம்பெறும் எனவும் செந்தில் தொண்டமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொட்டக்கலை நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி கொழும்பில் நடைபெற உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தொழிலாளர் தேசிய சங்கம் தலவாக்கலையில் ஏற்பாடு செய்துள்ள மே தின கூட்டத்தில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்க உள்ளார்.

அந்த கூட்டத்தின் பின் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள மே தின நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஜித்தின் இந்திய பயணம் குறித்து கட்சிக்கே தெரியாது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் குறித்து தானோ அல்லது...

நாட்டில் பலர் கைது

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் நேற்றும் (10) பலர்...

முன்னாள் மூத்த அமைச்சர் இந்த வாரம் கைது!

இந்த வாரம் மற்றொரு முன்னாள் மூத்த அமைச்சர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால்...

ரணில் மீண்டும் கைது?

ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சகத்திற்காக பல மாடி கட்டிடத்தை வாடகைக்கு எடுத்ததில்...