கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க நகைக்கடை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

0
201

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் இடம் அல்லது நடமாடும் வலயத்தில் தங்க நகைக்கடை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் இடம் அல்லது நடமாடும் வலயத்தில் புதிய வர்த்தக வாய்ப்பாக தங்கநகை விற்பனை வியாபாரத்தை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதெனக் கருதப்படுகிறது. அதுதொடர்பான முன்மொழிவை வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனி சமர்ப்பித்துள்ளது.

தற்போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இவ்வசதிகள் இன்மையால், அதன் புறப்படும் இடம்/நடமாடும் வலயத்தில் தங்க நகைக் கடையை அமைப்பதற்கு வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனி திட்டமிட்டுள்ளது.

அதற்கமைய, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் இடம்/நடமாடும் வலயத்தில் தங்க நகைக்கடையை அமைப்பதற்காக பொருத்தமான இயக்குநர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறி முறைமையைக் கடைப்பிடித்து விலைமனுக் கோரலை மேற்கொள்வதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here