பணம் செலுத்தாமல் எந்தவொரு கட்சிக்கும் பேருந்து வழங்க வேண்டாம் ; அதிரடி உத்தரவு

Date:

மே தினக் கூட்டத்துக்கு எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பணம் செலுத்தாமல் பேருந்துகளை வழங்க வேண்டாம் என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பணம் செலுத்தாமல் எந்தவொரு கட்சிக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் மே தினக் கூட்டத்துக்காக வழங்கப்பட மாட்டாது. இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது தொழிற்சங்கத்துக்கும் பணத்தைச் செலுத்திய பின்னர் பேருந்தினை வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...