இம்முறை ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாட நேபாள அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி நேபாளம் ஆசிய கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.
குழு A இல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் நேபாளம் அணியும் உள்வாங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் குழு B இல் உள்ளன.
ஆசிய கோப்பை போட்டிகள் எதிர்வரும் செப்டம்பரில் நடைபெற உள்ளது. ஆனால் போட்டி எங்கு நடத்தப்படும் என இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
பாகிஸ்தானில் ஆசிய கோப்பை போட்டிகளை நடத்த முன்னதாக ஆலோசிக்கப்பட்டு போதிலும் இந்தியாவின் கடும் எதிர்ப்பின் காரணமாக சர்வதேச கிரிக்கெட் சபை இறுதி முடிவை எடுப்பதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.
N.S