மக்களின் போராட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் ஆதரவளிக்கும் என அதன் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நேற்று மே தின விசேட செய்தியொன்றை விடுத்துள்ளார் .
“சிகாகோவில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் மூலம் மே தினம் உருவானது. இந்தப் போராட்டத்தின் விளைவாக தொழிலாளர் களின் உரிமைகள் உலகில் சட்டமாக மாறியது. இலங்கையும் சில தொழிலாளர் சட்டங்களை நிறுவியுள்ளது. இந்தச் சட்டங்களில் பெரும்பாலானவை ஐ.தே.க அரசாங்கத்தின் காலத்தில் இயற்றப்பட்டவை” என்று அவர் கூறினார்.
“இன்று அன்றாட வாழ்வை வாழ்வதே பிரதான போராட்டமாக மாறியுள்ளது ,போராட்டம் மக்களின் அன்றாட வாழ்வாக மாறியுள்ளது காலி முகத்திடலில் போராட்டம் நடத்தும் இளைஞர்களும் தங்களது அன்றாட வாழ்வுக்கான வழிகளையும் கேட்கின்றனர்,” என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார் .