ஊடக சுதந்திரம் காணப்படும் 180 உலக நாடுகள் வரிசையில் இலங்கை 135ஆவது இடத்தை பிடித்துள்ளது.
எல்லையற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வௌியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திர விடயத்தில் இலங்கை மிகவும் பின்தங்கிய நாடாகக் காணப்படுகிறது.
இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
1993ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு மே 3ம் திகதியும் உலக நாடுகள் சபையால் உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1991ம் ஆண்டு யுனெஸ்கோ மூலம் ஆப்ரிக்க பத்திரிகையாளர்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கடந்த 2016 முதல் 2021 வரை யுனெஸ்கோ அறிக்கையின்படி 455 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதை கடந்த 2022ல் மட்டும் 86 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் இந்தியாவில் மட்டும் 22 பேர். இந்த கணக்கு 2021ம் ஆண்டின் 55 பேர் என்பதை விட அதிகம்.
யுனெஸ்கோவின் இந்த அறிக்கையின்படி 4 நாட்களுக்கு ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதில் பத்தில் ஒரு வழக்கு மட்டுமே முடிவுக்கு வந்து நீதி கிடைப்பதாகவும் விமர்சனம் உள்ளது.
கடந்த 2022 டிசம்பர் கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் 363 பத்திரிகையாளர்கள் தனது கடமையை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.