ரயில் – ஆட்டோ மோதி விபத்து, இரு மாணவர்கள் உட்பட மூவர் பலி!

0
220

வெலிகமை – பெலேன ரயில் கடவையில் முச்சக்கர வண்டியொன்று ரயிலில் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர்கள் இருவரும் முச்சக்கர வண்டி சாரதியும் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.

நேற்று பிற்பகல் மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பணித்துக்கொண்டிருந்த ரயிலில் முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் பயணித்துள்ளார். விபத்தின் போது 9 மற்றும் 7 வயதுடைய இரு பிள்ளைகளும் முச்சக்கரவண்டியின் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, 12 வயது பிள்ளையும் அவரது தாயும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெலிகம மோதரவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here