இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணங்கியுள்ளது.
நாட்டில் நிலவும் பாரிய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனைகளின் அடிப்படையில் தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) 15 அமைச்சரவை அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முன்மொழிந்துள்ளது.
இன்று காலை சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்திலும் இதுகுறித்து ஆராயப்பட்டது.
நிபந்தனைகளுடன் இடைக்கால சர்வகட்சி அரசாங்கம் ஒன்றுக்கு ஆதரவு வழங்க முடியும் என அதன்போது தீர்மானிக்கப்பட்டது.