மின் கட்டணம் உயராது

0
156

தற்போதைய சூழ்நிலையில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் நோக்கம் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பப்படி எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்று அஜித் பி. பெரேரா கேட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றாலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு மின்சாரக் கட்டணங்களிலிருந்து கிடைக்கும் பங்களிப்பு அதிகமாக உள்ளது என்று கூறினார்.

இருப்பினும், அடுத்த மாதத்தின் முதல் வாரத்திற்குள் இந்த விஷயத்தில் சரியான கருத்தை தெரிவிக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here