மஹிந்த ராஜபக்ஷ இன்னும் சில தினங்களில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய தயாராகி வருவதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சகோதரரை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, மகிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், எந்த சூழ்நிலையிலும் பிரதமர் பதவியை காப்பாற்ற தயாராக உள்ளனர்.
பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் குழு நேற்று அலரிமாளிகைக்கு விஜயம் செய்து மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலக வேண்டாம் என கேட்டுக்கொண்டது.
பிரதமரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி தீர்மானித்தால், 2018ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க செயற்பட்ட விதத்தில் ஜனாதிபதியின் தீர்மானம் நிராகரிக்கப்பட வேண்டும். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் அழுத்தத்தினால் பதவி விலகப் போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமரை பாதுகாப்பதற்காக மொட்டு உறுப்பினர்கள் நாளை அலரிமாளிகைக்கு வருவதற்கு தயாராகி வருகின்றனர். கட்சி உறுப்பினர்களை அலரிமாளிகைக்கு அழைப்பதற்காக சமூக ஊடகங்களில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சார்பில் கட்சி உறுப்பினர்களை நாளை காலை 9 மணிக்கு அலரிமாளிகைக்கு வருமாறு மொட்டு கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.