கூலிப்படைகள் அமைத்து தொழிலாளர்களை தாக்கும் கம்பெனிகள் மனோ சபையில் கொதிப்பு

0
48

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை கொண்டு கம்பனி கூலிப்படைகள் அமைக்க பட்டுள்ளன. இரத்தினபுரி இங்கிரிய தும்பற தோட்டத்தில் நேற்று முதல் நாள், கம்பனிகாரர்களால் தொழிலாளர் தாக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கும்படி கிரியல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த பெரேராவுக்கு பணித்தேன். தாக்குதல் நடத்தியவர்களை இரு நாட்கள் தேடிய பொலிஸ் தற்போது அவர்களை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு இன்றைய தினம் பாராளுமன்றத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார உரையாற்றுகையில் குறுக்கிட்ட மனோ கணேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here