இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டர் விபத்து

0
247

மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த 12 பேரில், இரண்டு விமானிகள் உட்பட சுமார் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டர் ஒன்று மதுரு ஓயா பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இன்று (மே 09) காலை பயிற்சி அமர்வின் போது இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here