சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (12) முற்பகல் அலரி மாளிகையில் கொண்டாட்ட நிகழ்வு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையில் இடம்பெற்றது.
பிரதமர் தினேஸ் குணவர்த்தன, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவரத்தன மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். சுமார் 3000 தாதியர்கள் கலந்துகொண்டனர்.
தாதியர்களின் எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், சேவையில் இருப்பவர்கள் மற்றும் சேவையில் சேர விரும்புபவர்கள் தொழில்சார் கல்வியை நிறைவு செய்யும் வகையில் தாதியர் பயிற்சிப் பாடசாலை ஒன்றை விரைவில் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளார்.
ஒரு மட்டத்தில் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. எமது நாட்டின் சுகாதார சேவை மற்றும் தாதியர்களின் எதிர்காலத்திற்காக இவ்வாறான தியாகத்தை செய்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பாராட்டினார்.
எதிர்கட்சியில் இருந்து கொண்டு முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நிகழ்வில் கலந்து கொண்டதுடன் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கலந்து கொள்ளவில்லை.
