கள்ள நோட்டில் நீதிமன்ற அபராதம் செலுத்திய நபர் கைது

0
68

போலி நாணயத்தாள்களுடன் நீதிமன்ற அபராதத்தை செலுத்த முற்பட்ட 39 வயதுடைய நபரொருவர் மஹியங்கனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹியங்கனை, கிரந்துருகொட்டா பகுதியைச் சேர்ந்த சந்தேக கைது செய்யப்பட்டுள்ளார். 5,000 போலி நாணயத்தாள்களை 21,000 ரூபா அபராதத்துடன் அவர் மஹியங்கனை மாவட்ட நீதிமன்றத்தில் செலுத்தினார்.

இதன்படி, கைது செய்யப்பட்டவர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, களுத்துறை பிரதேசத்தில் போலியான 5000 ரூபா பணத்துடன் பொருட்களை கொள்வனவு செய்ய முற்பட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விசாரணையில், களுத்துறை தெற்கு பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து 5,000 ரூபாய் நோட்டுகள் 11 மற்றும் அச்சு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது.

47 வயதான தம்பதியினர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here