ஆசிரியர்களுக்கான இடமாற்றங்களை உடனடியாக வழங்கவும் ; அதிபர்களுக்கு கல்வி அமைச்சு கடிதம்

Date:

தற்போதைய ஆசிரியர் இடமாற்றத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பாடசாலை நிர்வாகங்களையும் கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பான கடிதம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பத்தாண்டு இடமாற்றங்களின் கீழ் வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகளின்படி, இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர்களது சேவைகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை எனவும், இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தமது கடமைகளுக்கு சமூகமளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது சட்டவிரோதமான செயலாகும். அனைத்து அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள இடமாற்ற உத்தரவுகளின்படி இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை அவர்களது பாடசாலைகளில் இருந்து உடனடியாக விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் கடமைக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்களுக்கு கடமைகளை வழங்குவதற்கு உடனடியாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மேற்படி ஏற்பாடுகளைச் செய்த பின்னர், மூன்று நாட்களுக்குள் அனைத்து அதிபர்களும் விவரங்களை அனுப்பிவைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...