பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொழும்பில் பேரணி

0
122

காசா பகுதியில் இஸ்ரேலால் தாக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்காக உலகப் போர் எதிர்ப்புக் கூட்டணி அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவினால் ஆரம்பிக்கப்பட்ட உலக யுத்த எதிர்ப்புக் கூட்டணிக்கு அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் மத சமூகத்தினர் ஆதரவு வழங்கியுள்ளனர்.

இதன்படி, பலஸ்தீனர்களுக்காக குரல் எழுப்பும் வகையில் எதிர்வரும் 17ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள சமாதி சிலைக்கு அருகில் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பாலஸ்தீனியர்களின் மனித உரிமைகள் மிகவும் கொடூரமான முறையில் மீறப்படும் ஒரு பின்னணியில், அந்த ஆதரவற்ற மக்களுக்காக நாம் குரல் எழுப்ப வேண்டும் என்று ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here