எம்பிக்களுக்கான வாகன அனுமதிப் பத்திரம் வழங்க எதிர்ப்பு!

0
53

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகாரம் மற்றும் சிவில் அமைப்புக்கள் மற்றும் பிரஜைகளின் ஒன்றியம் இணைந்து இன்று (15) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த அமைப்பு எழுத்து மூலம் கடிதம் எழுதியிருந்தது.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

எவ்வாறாயினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து குறித்த நோட்டீசை பெற்ற பொலிஸார், அதனை ஜனாதிபதி செயலகத்திற்கு எடுத்துச் சென்றதையடுத்து, போராட்டக்காரர்கள் பொலிஸாருடன் இணைந்து ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

புகைப்படங்கள் – அஜித் செனவிரத்ன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here