கிழக்கில் இனி காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானின் ஆட்சி!

0
234

கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முற்பகல் நியமிக்கப்பட்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் நாட்டின் ஆளுநராக பதவி ஏற்றுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக ஆறுமுகன் தொண்டமான் தெரிவாகி நுவரெலியாவில் காங்கிரஸை வழிவாக முன்னொக்கி வழிநடத்திச் சென்ற வேளையில், ஊவா மாகாணத்தில் காங்கிரஸின் பலத்தை வலுப்படுத்தவென செந்தில் தொண்டமான் ஊவாவிற்கு பொறுப்பானவராக நியமிக்கப்பட்டார்.

அதன்பின் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல்கள் அனைத்திலும் செந்தில் தொண்டமான் வெற்றிபெற்று ஊவா மாகாண அமைச்சராகவும் ஊவா மாகாண பதில் முதலமைச்சராகவும் கடமையாற்றினார்.

ஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் காங்கிரஸ் தேசிய சபையின் விருப்பத்துடன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

காங்கிரஸின் தலைவராக அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கட்சியை வழிநடத்தி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானை சிறு வயதிலேயே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமித்துக் கொண்டார். அரசாங்கத்தில் தமது கட்சி முக்கியஸ்தர்களுக்கு பல பதவிகளையும் பெற்றார்.

தற்போது நாட்டின் அதிக தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பதவியேற்று ஒட்டுமொத்த இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராக பீ.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோரும் இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here