ஜனாதிபதியின் ஆசியுடன் மக்களின் பேராதரவுடன் ஒரு வருடத்தை கடந்து சாதனை பயணத்தில் கிழக்கு ஆளுநர்!

0
220

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஆளுநராக பொறுப்பேற்று இன்றுடன் 1 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

செந்தில் தொண்டமான் தனது பணிகளை சிறப்பாக முன்னெடுத்தமைக்காகவும் தொடர்ந்தும் கடமைகளை திறம்பட செய்வதற்காகவும் தனது பாராட்டுக்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார்.

மேலும் செந்தில் தொண்டமான் ஆளுநராக பொறுப்பேற்று ஒரு வருட காலத்தில் 1.9 மில்லியன் பயனாளிகளுக்கு, 8.032 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில், 2,695 வேலைத்திட்டங்களை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதாக ஆளுநர் செயலக தரவுகள் குறிப்பிடுகின்றன.

இந்த மூன்று மாவட்டங்களில் வாழும் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை அரவணைத்து சமத்துவ அபிவிருத்தி நிலைமையை. ஆளுநர் செந்தில் தொண்டமான் உருவாக்கி இருப்பதாக புத்திஜீவிகள் பலரும் புகழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here