முள்ளிவாய்க்கால் நினைவு முற்றதில் அஞ்சலி நிகழ்வு

0
171

தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றதில் 10:30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

இந்த அஞ்சலி நிகழ்வில் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் கலந்து கொண்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி உள்ளார்.

முள்ளிவாய்க்கால் மண்ணிலே முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் பொதுக் கட்டமைப்பினால் நினைவு பேருரை ஆற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here