கிழக்கு ஆளுநருடன் சீதையம்மன் ஆலயம் சென்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவ்

Date:

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் அவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் உள்ளிட்ட குழுவினர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

அதன் பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்தன ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் அவர்களை அலரிமாளிகைக்கு அழைத்து கலாச்சார உறவுகளை வளர்ப்பது மற்றும் இலங்கையின் 12 தொழில்நுட்பக் கல்லூரிகளுடன் இணைந்து திறன் மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பது குறித்தும் கலந்துரையாடினார்.

சமீபத்திய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான கற்றல் ஆய்வகங்களுடன் மையங்களை பொருத்துவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. திட்டத்தின் முதல் கட்டத்தில், வாழும் கலை திறன் பயிற்சி திட்டம் 5000 இளைஞர்களுக்கு வசதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர் இன்று காலை நுவரெலியா சீதையம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ளவென ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நுவரெலியாவிற்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் அவர்கள் திருகோணமலை க்கும் விஜயம் செய்யவுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...