Saturday, July 27, 2024

Latest Posts

இரான் ஜனாதிபதி சென்ற விமானம் விபத்து! மீட்பு பணிகள் துரிதப், சோகத்தில் இரான்!

இரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இருந்த ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதியதாக அரசு ஊடகம் கூறுகிறது.

இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியனும் அந்த ஹெலிகாப்டரில் இருந்ததாக கூறப்படுகிறது.

மோசமான வானிலை காரணமாக மீட்புப் படையினர் அந்த இடத்தை அடைவதில் சிக்கல் நீடிப்பதாக இரான் உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிதி கூறினார்.

ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை, இன்னும் எந்த தொடர்பும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரான் ஜனாதிபதி ரைசி சென்ற ஹெலிகாப்டரைத் தேடுவதற்கு உதவ துருக்கி அனுப்பிய ஆளில்லா விமானம் ஒன்று முக்கிய தடயம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஜனாதிபதி ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினருடன் இருந்த ஃபார்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, மலை மற்றும் மரங்கள் நிறைந்த அந்த பகுதியில் 5 மீட்டர் தொலைவு வரை மட்டுமே வெறும் கண்களால் பார்க்க முடிகிறது. அவசரகால மீட்புக் குழுவினருடன் இருக்கும் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர், தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் விமானத்தை கண்டுபிடிப்பது கடினம் என்று கூறுகிறார்.

இரான் – அஜர்பைஜான் எல்லையில் கிஸ் கலாசி மற்றும் கோடாஃபரின் அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் அஜர்பைஜான் ஜனாதிபதி இலாம் அலியேவுடன் இரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பங்கேற்று விட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இரானின் வடகிழக்கு நகரான தப்ரிஸுக்குச் சென்று கொண்டிருந்த போது 50 கி.மீ. முன்னதாக வர்செகான் நகருக்கு அருகே அவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையில் மோதியுள்ளது. “பல்வேறு மீட்புக் குழுக்கள்” ஹெலிகாப்டரை இன்னும் தேடி வருவதாக இரானின் உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிடி தெரிவித்துள்ளார்.

இரானிய அரசு தொலைக்காட்சியில் பேசிய வாஹிடி, “மோசமான வானிலை மற்றும் அப்பகுதியில் நிலவும் மூடுபனி” காரணமாக விபத்து நடந்த இடத்தை மீட்புக்குழு அடைய “நேரம்” ஆகும் என்று கூறுகிறார்.”அனைத்தும் கட்டுக்குள் இருக்கிறது. மீட்புக் குழுக்கள் தங்கள் பணியைச் செய்து வருகின்றன. கூடிய விரைவில் மீட்புப் பணி நிறைவடையும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

இரானின் அவசர சேவைப் பிரிவு அளித்துள்ள தகவலின் படி, சம்பவ இடத்திற்கு 8 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் மோசமான வானிலை காரணமாக, மீட்புக் குழு சிரமங்களை எதிர்கொண்டுள்ளது. இரான் அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

பல மணி நேர தேடுதலின் முடிவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்த இடத்தை தேடுதல் குழுக்கள் கண்டுபிடித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது. இரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டியின் தலைவர் பிர்ஹோசைன் கோலிவாண்ட், ‘நிலைமை நல்லவிதமாக தோன்றவில்லை என்று அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் இடத்தை “சில நிமிடங்களில்” அடைவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.ஹெலிகாப்டர் விழுந்து கிடப்பதாக கருதப்படும் இடத்திலிருந்து அவர்கள் தோராயமாக 2 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரானின் அரசு தொடர்பு செய்தி நிறுவனமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக பிரார்த்தனை செய்யுமாறு இரானியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அவர் பயணம் செய்த வாகனத்தொகுதியில் இடம் பெற்றிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த நிறுவனம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.மஷாத் என்ற நகரில் ஜனாதிபதி ரைசி நலமாக இருக்க வேண்டி பலரும் பிரார்த்தனை செய்வதைக் காட்டும் காட்சிகளும் அரசு தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளன.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.