ஐஎஸ்ஐஎஸ் சந்தேகநபர்கள் என நான்கு இலங்கை பிரஜைகள் கைது

0
166

அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில், இந்திய குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) நான்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத சந்தேக நபர்களை கைது செய்துள்ளது.

அவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள் என்று இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குஜராத் ஏடிஎஸ் சந்தேக நபர்களை தீவிர விசாரணைக்காக ஒரு தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்றதாக TV9 குஜராத்தி செய்தி வெளியிட்டுள்ளது.

அகமதாபாத் விமான நிலையத்தில் அவர்கள் இருப்பதற்கான துல்லியமான நோக்கம் தெளிவாக இல்லை.

விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தகுதிச் சுற்று மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்களுக்காக மூன்று ஐபிஎல் அணிகள் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்னதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here