இந்த நாட்டில் பௌத்த மற்றும் இந்து குடும்பங்கள் பாரியளவில் மதமாற்றம் செய்யப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
“எங்கள் வணக்கத்திற்குரியவர்களே, இன்று இந்த நாட்டிலுள்ள பௌத்தக் குடும்பங்களும் வடக்கில் உள்ள இந்துக் குடும்பங்களும் வேறு அமைப்புகளுக்கும் வேறு தத்துவங்களுக்கும் மாறி வருகின்றன. நேற்றுமுன்தினம் இந்நாட்டில் பிரசங்கம் செய்த ஒரு போதகருக்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தோலிக்க பாதிரியார்களால் திட்டப்பட்டதை பார்த்தோம். இந்த நிலைமைகளில் இருந்து சமுதாயத்தை காப்பாற்ற உங்களுடன் சேர்ந்து எங்கள் உயிரை தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம்.”
நேற்று (20) இடம்பெற்ற பௌத்த சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.