இன்றைய வானிலை மாற்றம்

Date:

தென்மேற்கு பருவக்காற்று நிலை படிப்படியாக நாட்டில் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (21) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மி.மீ. 100 பாகைக்கு மேல் பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யும்.

நாடு முழுவதும் காற்று அவ்வப்போது வீசும். சூறாவளி காற்று (40-50) சாத்தியமாகும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...