பிள்ளைகளுடன் இரவு உணவு மேசையில் இருந்தவர் சுட்டுக் கொலை!

0
51
Shooting from a pistol. Reloading the gun. The man is aiming at the target

களுத்துறை, கட்டுகுருந்த பிரதேசத்தில் நேற்று (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது ஏழு வயது மகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுகுருந்த புகையிரத நிலைய வீதியில் வசிக்கும் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இவர் தனது வீட்டில் மூன்று குழந்தைகளுடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெற்கு களுத்துறை பொலிஸார் மற்றும் பல விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here