மன்னார் காற்றாலை உற்பத்தி, கணிய மணல் அகழ்வுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் சுமந்திரன்

0
57

காற்றாலை மின்சாரம் அமைக்கலாம். ஆனால் அதற்கான உகந்த இடங்களை தெரிவு செய்து முன்னெடுக்க வேண்டும். மன்னார் தீவு என்பது கடல் மட்டத்தில் இருந்து சற்று குறைவான இடத்தில் காணப்படுகின்றது. இத்தீவு இச்செயல் திட்டத்திற்கு பொருத்தமானதாக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த விசேட கூட்டம் இன்று வியாழக்கிழமை (23) காலை மன்னாரில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டதோடு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,மன்னார் பிரஜைகள் குழு, மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்த கருத்துகள் கீழே வீடியோ வடிவில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here