கொலை செய்யப்பட்ட ராஜகுமாரிக்கு நீதிக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் – படங்கள் இணைப்பு

Date:

திரைப்பட கலைஞர், கோடீஸ்வர வர்த்தகர் சுதர்மா நெத்திகுமார வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த நிலையில் கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்த பதுளை ராஜகுமாரிக்கு நீதிக் கோரி கொழும்பில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

R. ராஜகுமாரியின் கொலையாளிகளை வெளிப்படுத்து! விசாரணையை விரைவுபடுத்துங்கள்! ஆர்.ராஜகுமாரிக்கு நீதி!வீட்டுப் பணியாளர்கள் தொடர்பான சட்டத்தை அமுலாக்கு போன்ற பதாகைகளுடன் இன்று (24) பிற்பகல் கொழும்பு அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக மௌனப் போராட்டமொன்று இடம்பெற்றது.

கடந்த 11ஆம் திகதி தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் வெலிக்கடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் ஆர்.ராஜகுமாரி என்ற பெண் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளின் போது ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் நடத்திய தாக்குதலில் இவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. பணிபுரிந்த வீட்டிலும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசபந்து தென்னகோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி)...

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக...

இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு

தாய்லாந்து அமைச்சரவை 10,000 இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. எல்லை...

துசித ஹல்லோலுவ கைது

தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி ரணில்...