யாழ். பல்கலைக்கு புதிய கட்டடம்

0
33

யாழ்ப்பாணம் நகரில் போதனா வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (24) காலை திறந்து வைத்துள்ளார்.

குறித்த கட்டட தொகுதி 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார்.

இதேவேளை ஜனாதிபதி துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் இளைஞர் சேவை மன்ற நிகழ்வு, தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறும் ஆசிரியர் நியமன நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here