ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அடுத்த மாதம் ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி, ஜூன் 10 ஆம் திகதி முதல் ஜனாதிபதி ஜெர்மனிக்கு விஜயம் செய்வார் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ஐந்தாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாகும்.
அவர் முன்னர் இந்தியா, சீனா, கத்தார் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தார்.