பஸ் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய சேவை கட்டணங்களை உயர்த்தவும் அனுமதி

0
130

இன்று (24) அதிகாலை 03.00 மணி முதல் அமுலுக்கு வரும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு நிகரான பஸ் கட்டணங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் விலைகளை மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்துக் கட்டணங்களை திருத்தியமைக்க உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு விலை சூத்திரத்திற்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த விலைச் சூத்திரத்திற்கு நேற்று (23) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here