கருத்துச் சுதந்திரத்தில் இலங்கை முன்னேற்றம்: உலகளாவிய வெளிப்பாடு அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது

0
232

கருத்து சுதந்திரத்தில் முன்னேற்றம் கண்டுள்ள ஐந்து நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய வெளிப்பாடு அறிக்கை (GER) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பிரேசில், தாய்லாந்து, நைஜர் மற்றும் பிஜி ஆகிய நாடுகளுடன் இலங்கையும் அதிக வெளிப்படைத்தன்மையை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள்தொகையில் 50 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் கருத்துச் சுதந்திர நெருக்கடியில் வாழ்வதாகவும், சுதந்திரமாக பேச முடியாது என்பதை 2024 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய வெளிப்பாடு அறிக்கை வெளிக்காட்டுகிறது.

இந்த அறிக்கையானது கருத்துச் சுதந்திரத்தின் 25 குறிகாட்டிகளைப் பயன்படுத்தி, உலகளவில் சுதந்திரமான கருத்து மற்றும் தகவலுக்கான உரிமையின் பகுப்பாய்வை வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி, உலகளாவிய ரீதியில் 195 நாடுகளில் 161 நாடுகளை உள்ளடக்கிய இந்த அறிக்கையில் இலங்கை 94 ஆவது இடத்தில் காணப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here